சென்ற வகுப்புகளில் தொடைகள், பாவகைகள் பற்றி அறிந்து கொண்டோம், இவ் வகுப்பில் மேலும் பாவிலக்கணங்களை அறிந்து கொள்வோம்.
- தொடைகளில் ‘தொடை விகற்பங்கள்’ முக்கியத்துவம் பெறுகின்றன. அதாவது மோனை, எதுகை என்பன விகற்பங்கள் ஆகி, பல இடங்களையும், பெயர்களையும் பெறுகின்றன.
“அடிதொறும் தலையெழுத் தொப்பது மோனை” (404)
இ-ள்:
ஒவ்வோரடியிலும் தலை எழுத்து ஒன்றி வருவது ‘மோனை’ ஆகும், முன்னர் கற்றோம். இப்போது அம் மோனையின் ‘விகற்பங்கள்’ எனவழைக்கப்
படுகின்றன.
மேலும் மோனை அமையுமிடங்களுக்கு, அதாவது சீர்களுக்கு ஏற்றாற் போல, அம் மோனைக்குத் தனித்தனிப் பெயர்கள் தரப்பட்டுள்ளன. மோனை விகற்பங்களான அவை 7 வகைகளாகும்.
அடியொன்றின் முதற்சீரின் முதலெழுத்தைத் தொல்காப்பியர் ‘ தலை யெழுத்து ‘ என்கிறார்.
- இணைமோனை
- பொழிப்புமோனை
- ஒரூஉமோனை
- கூழைமோனை
- மேற்கதுவாய் மோனை
- கீழ்க்கதுவாய் மோனை
- முற்றுமோனை
இவை ஏழு மோனை விகற்பங்களும் ஒரே செய்யுளில் அமைந்துள்ளன:
கந்தபுராணம், திருநாட்டுப் படலம், 45
” கூர்ப்புக் கொண்டகட் கொடிச்சியர் குளிர்புனங் காப்போர்
ஆர்ப்புக் கொண்டுகை விசைத்தெறி மணிக்கல்வந் தணையச்
சார்ப்புக் கொண்டதஞ் சிறகரால் விலக்கியத் தடத்துப்
பார்ப்புக் கொண்டு கொண்டெழுவன தோலடிப் பறவை”
கூ – தலைமோனை
கூ கொ – இணை மோனை(1, 2 )
கூ கொ – பொழிப்பு மோனை (1 ,3)
கூ கு – ஒரூஉ மோனை (1, 4)
கூ கொ கொ – கூழை மோனை (1, 2, 3 )
கூ கொ கு – மேற்கதுவாய் மோனை (1, 3, 4 )
கூ கொ கு – கீழ்க்கது வாய் மோனை (1, 2, 4 )
கூ கொ கொ கு – முற்று மோனை (1, 2, 3, 4)
- எதுகைத் தொடை விகற்பங்கள் : 7
இவையும் மோனைக்கு வந்தன போலவே அமையும்.
“ஒருசீ ரிடையிட் டெதுகை யாயின் பொழிப்பென மொழிதல் புலவ ராறே”
இ-ள்:
ஒரு சீர் இடையிட்டு எதுகை முதலியன வருமாறு தொகுப்பின் பொழிப்பு என்றல் புலவர் நெறியாம் எ-று /s6
எ-டு: எதுகை விகற்பம் ஏழும் வந்தன காண்க. முதற்சீரின் இரண்டா மெழுத்து ஒன்றி வருதலே எதுகையாம்.
இத் திருப்புகழின் (முத்தைத் தரு ..) மூன்றடிகளிலும் ( 10 சீர்களிலும்) எதுகையின் 7 விகற்பங்களும் அமைந்துள்ளமை காண்க.
“பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வது — மொருநாளே “
பத்தற்கிர தத்தை — இணை எதுகை (1, 2 )
பத்தற்கிர தத்தை கடவிய — பொழிப்பு எதுகை (1,3 )
பத்தற்கிர தத்தை கடவிய பச்சைப்புயல் — ஒரூஉ எதுகை (1,4 )
பத்தற்கிர தத்தைக் கடவிய — கூழை எதுகை (1,2,3 )
இத் திருப்புகழின் (முத்தைத் தரு ..) மூன்றடிகளிலும் ( 10 சீர்களிலும்) எதுகையின் 7 விகற்பங்களும் அமைந்துள்ளமை காண்க.
“பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வது — மொருநாளே “
பத்தற்கிர ..கடவிய பச்சைப்புயல் — மேற்கதுவாய் எதுகை ( 1,3,4 )
பத்தற்கிர தத்தை.. பச்சைப்புயல் — கீழ்க்கதுவாய் எதுகை ( 1,2,4 )
பத்தற்கிர தத்தைக் கடவிய பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் பட்சத்தொடு ரட்சித்து — முற்று எதுகை ( 1,2,3,4..5,6,7,8 )
அடுத்து, ‘ செந்தொடை’ பார்ப்போம்:
3 “சொல்லிய தொடையொடு வேறுபட் டியலிற் சொல்லியற் புலவரது செந்தொடை யென்ப” (412)
இ-ள்: மேற்கூறப்பட்ட தொடை வகைகள் எல்லாவற்றோடும் ஒவ்வாது வரின், அதனை இயற்கைச் சொல்லால் செய்யுள் செய்யும் புலவர் அது ‘செந்தொடை’ என்பர் எ-று
எ-டு: மணிமிடை பவளம், அகநானூறு, 270)
“இருங்கழி மலர்ந்த வள்ளிதழ் நீலம்
புலாஅன் மறுகிற் சிறுகுடிப் பாக்கத்
தினமீன் வேட்டுவர் ஞாழலொடு இலையும்
மெல்லம் புலம்ப நெகிழ்ந்தன தோளே “
” பூத்த வேங்கை வியன்சினை யேறி
மயிலின மகவு நாடன்
நன்னுதற் கொடிச்சி மனத்தகத் தோனே ( யா/விரு, உதாரணப்பா)
4 தொடைகளின் தொகைக்கு – எண்ணிக்கைக்கு – புறநடை இது:
“தெரிந்தனர் விரிப்பின் வரம்பில பல்கும்” (414)
இ-ள்:
625 அடிகளோடு மாறிப் பெற்ற தொடைகள் 13,708 ற்கும் மேலாகும். இவற்றோடு தொடை விகற்பங்களையும், அடி வேறுபாடுகளையும் கூட்ட வரும் தொடைப் பகுதிகள் வரையறை யின்றிப் பலவாம் எ-று
முடிவாக, தொடை வகையை இரண்டு பிரிவுக்குள் அடக்கலாம்:
- தெரிந்தில தொடைகள்
- தெரிந்த தொடைகள் என்பனவாம். அவை குறித்து தொல்காப்பியர்
“தொடைவகை நிலையே யாங்கென மொழிப” (415)
இங்கு நிலையே என்றது வழக்கிலுள்ள தெரிந்த தொடைகளையும், ஆங்கு என்றது இருவகைகளையும் குறித்தன. அதனை ‘இரண்டிடம்’ எனவும், வரையறை உள்ளனவும், வரையறை இல்லனவும் எனவும் கொள்க என்று பேராசிரியம் உரை செய்கிறது.
– இவ் வகுப்பு நிறைவு –