Class 43

தமிழ் யாப்பிலக்கண வகுப்பு – 5. தொல்:பொருள்: ‘ செய்யுளி யல்

சென்ற வகுப்பில் தொடை வகைகள் 8 என்றும், அவற்றுள் முதலாவதாக ‘ மோனைத்
தொடை ‘ பற்றியும் கற்றோம். அடுத்து ‘ எதுகைத் தொடை ‘ கற்போம்:

1

” அஃதொழித் தொன்றி னெதுகை யாகும் ” (405)

இ-ள்:

இரண்டடியிலும் முதனின்ற சீரின் முதலெழுத்தொழிய, அல்லனவெல்லாம் ஒன்றி வருதலும், ஓரெழுத்து ஒன்றி வருதலும் ‘ எதுகை ‘ ஆகும். –1

அச்சீர் முழுதும் ஒன்றின் ‘ தலையாகு எதுகை ‘ என்றும்,
இரண்டாமெழுத்து மட்டும் ஒன்றில்
‘ தலையாகு எதுகை ‘ என்றும் வழங்கும்.

எ-டு: இது ‘ தலையாகு எதுகை ‘ ( சீரெதுகை)

” பஞ்சிஒளிர் விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க
செஞ்செவிய கஞ்சநிகர் சீறடியள் ஆகி
அஞ்சொலிள மஞ்ஞைஎன
அன்னமென மின்னும்
வஞ்சிஎன நஞ்சமென வஞ்சமகள் வந்தாள் “
( கம்பன், சூர்ப்பனகைப் படலம்)

இங்கு அடிதோறும் இரண்டாம் எழுத்து ஒன்றி வந்தமை காண்க. மேலும் மோனையும் வந்தமையும் அழகு.

எ-டு: 2 ‘ அடியெதுகை எதுகை’ சீர் முழுவதும் காண்க.
( அடியெதுகை)

” ஊனாய்உயிர் ஆனாய்உடல்
ஆனாய்உல கானாய்

வானாய்நிலன் ஆனாய்கடல்
ஆனாய்மலை ஆனாய்

தேனார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
நல்லூர் அருட்டுறையுள்

ஆனாய்உனக் காளாய்இனி
அல்லேன் எனலாமே “
( சுந்தரர், 7 ஆம் திருமுறை) –4

2

அடுத்து ‘ மோனை எதுகைத் தொடைகளுக்குரிய கிளை எழுத்துகள் ‘

” ஆயிரு தொடைக்கும் கிளையெழுத் துரிய ” ( 406)

கிளை எழுத்துகளாவன:

வருக்க எழுத்து, நெடிலெழுத்து, ஒத்தவெழுத்து, உயிரெழுத்து, மூவின எழுத்து என ஐந்தாம்.

எ-டு: வருக்க மோனை/வருக்க எதுகை:

” அப்பனை நந்தியை ஆரா அமுதனை

ஒப்பிலி வள்ளலை ஊழி முதல்வனை

எப்பரி சாயினும் ஏத்துமின் ஏத்தினால்

அப்பரி சீசன் அருள்பெற லாமே ” ( திருமந்திரம்) – 5

எ-டு: நெடில் மோனை/ குறிலெதுகை :

” மாசில் வீணையும் மாலை மதியமும்

வீசு தென்றலும் வீங்கிள வேனினும்

மூசு வண்டறை பொய்கையும் போன்றதே

ஈசன் எந்தை இணையடி நீழலே ” ( அப்பர் சுவாமிகள்) -6

எ-டு: ‘ உயிரெதுகை ‘

உயிரெழுத்துகள் பெரும்பாலும் எதுகையாக வருவதில்லை. ஆயின் உயிரேறிய மெய்களே
‘ உயிரெதுகை ‘ எனவும் கொள்ளப்படும்.

” நினைத்த தெத்தனையிற் றவறாமல்
நிலைத்த புத்திதனைப் பிரியாமல்
கனத்த தத்துவமுற் றழியாமற்
கதித்த நித்தியசித் தருள்வாயே
மனித்தர் பத்தர்தமக் கெளியோனே
மதித்த முத்தமிழிற் பெரியோனே
செனித்த புத்திரரிற் சிறியோனே
திருத்த ணிப்பதியிற் பெருமாளே “
( திருத்தணிகைத் திருப்புகழ்) -7

இனி, மூவின எழுத்தெதுகை : ( வல், மெல், இடை)

” கடத்திற் குறத்தி பிரானரு ளாற்கலங்
காதசித்தத்

திடத்திற் புணையென யான்கடந் தேன்சித்ர
மாதரல்குற்

படத்திற் கழுத்தில் பழுத்தசெவ் வாயிற் பணையிலுந்தித்

தடத்திற் றனத்திற் கிடக்கும் வெங்காம சமுத்திரமே “
( கந்தரலங்காரம்)

எ-டு: ‘ மெல்லின எதுகை’

” இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னுந்
துன்பத்துள் துன்பம் கெடின் ” ( திருக்குறள் 369, அவாவறுத்தல்) -8

எ-டு: ‘ இடையின எதுகை:

” கள்ள முள்ள வல்ல வல்லி
கையிலள்ளிப் — பொருளீயக்

கல்லு நெல்லு வெள்ளி தெள்ளு
கல்வி செல்வர் — கிளைமாய

அள்ளல் துள்ளி ஐவர் செல்லு
மல்லல் சொல்ல — முடியாதே

ஐய ரைய மெய்யர் மெய்ய
ஐய செய்ய — கழல்தாராய்

வள்ளல் புள்ளி நவ்வி நல்கு
வள்ளி கிள்ளை — மொழியாலே

மைய லெய்து மைய செய்யில்
வையில் வெள்வ — ளைகளேற

வெள்ள மள்ளர் கொய்யு நெல்லின்
வெள்ள வெள்ளி — நகர்வாழ்வே

வெய்ய சைய வில்லி சொல்லை
வெல்ல வல்ல — பெருமாளே “
( வெள்ளிநகர்த் திருப்புகழ்)

• இவ்வகுப்பு நிறைவு -

[7:50 pm, 29/09/2026] புலவர் கல்லோடை: ஐயா, மேலும் எனது தவறுகள் இவை, தயவுசெய்து திருத்தி விடுங்கள், சிரமத்திற்கு மன்னிக்க வேண்டுகிறேன்.

1
அச்சீர் முழுவதும் ஒன்றின் ‘ அடியெதுகை ‘ என்றும், இரண்டாமெழுத்து மட்டும் ஒன்றில் ‘ தலையாகு எதுகை ‘ என்றும் வழங்கும்.

எ-டு (1)
இது ‘ தலையாகு எதுகை)

எ-டு : ( 2 )
இது ‘ அடியெதுகை ‘
சீர் முழுவதும் ஒன்றிவரத் தொடுப்பது
‘ தலையாகு எதுகை ‘ என்றும், ஓரெழுத்து மட்டும் ஒன்றி வரத் தொடுப்பது ‘ இடையாகு எதுகை ‘ என்றும், மற்றவை ‘ கடையாகு எதுகை ‘ என்றும் வழங்குவர்.