தமிழ் யாப்பிலக்கண வகுப்பு – 3
தொல்:பொரு: 8, செய்யுளியல்
செய்யுளின் உறுப்புகளில்
அடுத்து ‘ சீர் ‘ பற்றிப் பார்ப்போம்:
1
” ஈரசை கொண்டு மூவசை புணர்த்துஞ் சீரியைந் திற்றது சீரெனப்படுமே “
( 324)
இ-ள்:
இரண்டசையானும் மூன்றசையானும் ஒவ்வொரு சொற்கள் சீராக அமைந்து முடிவன ‘ சீர் ‘ எனப்படும்.
( கவனிக்க :-
ஓரசைச் சீர் வெண்பாவின் ஈற்றடியில் ஈற்றுச் சீராக வருவது
என்றதாலும், நாலசை கொண்டமையும் சீர்கள் வருவன மிகக் குறைந்தளவே என்றதாலும் அவற்றை ஈண்டு தொல்காப்பியர் குறிக்காது விட்டார் எனக் கொள்க. பின்பு குறிப்பார்.
2
எனவே, நேர்நேர் நிரைநேர் நிரைநிரை நேர்நிரை என்பன நான்கும் இயற்சீர்கள் ஆகும்.
நேர்புநேர்பு நிரைபுநேர்பு
நிரைபுநிரைபு நேர்புநிரைபு என்பன நான்கும் ஆசிரியவுரிச் சீர்களாகும்.
இயற்சீர் அமைந்த சுவாமி மலைத் திருப்புகழ் :
” பாதி மதிநதி போது மணிசடை
நாத ரருளிய — குமரேசா
பாகு கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய — மண வாளா
காது மொருவிழி காகமுற அருள்
மாய னரிதிரு — மருகோனே!
( பாதி – நேர்நேர்
மதிநதி – நிரைநிரை
போது – நேர்நேர்
மணிசடை – நிரைநிரை
நாத – நேர்நேர்
ரருளிய – நிரைநிரை
குமரேசா – நிரைநேர்நேர்.
இவ்வாறே கண்டு கொள்க)
3
எ-டு: ( ஆசிரியவுரிச்சீர்)
வீடுபேறு — நேர்புநேர்பு
வரகுச்சோறு — நிரைபுநேர்பு
தடவுமருது — நிரைபுநிரைபு
பாடுகுருகு — நேர்புநிரைபு
திருமுருகாற்றுப்படையில்
நேர்பு அசை எ-டு:
- வலன் ஏர்பு (வரி -1)
- புலராச் சாந்தம் புலர்சந்து பூண்டு (வரி – 15)
- நெடுவேள் மார்பின் ஆரம் சூழ்ந்து (வரி – 148)
- அஞ்சுவரு மரபின் கட்கண் நோக்கு (வரி – 150)
நிரைபு அசை எ-டு: - பல்லா ஆன் நிரை பரந்து (வரி – 42)
- வானதர் உருமின் முரசு அதிர்ந்து (வரி – 119)
- துளங்கு இயல் மார்பின் நன்மலம் அமர்ந்து (வரி 151)
- நறைக்காய் இடையிடுபு (வரி – 190)
4
நிரையசைகள் மிகவதிகமாக வருமாறு சம்பந்தப் பெருமான் அருளிய திருநள்ளாற்றுத் திருப்பதிகம் :
“தளிரிள வளரொளி தனதெழில் தருதிகழ் மலைமகள்
குளிரிள வளரொளி வனமுலை இணையவை குலவலின்
நளிரிள வளரொளி மருவுநள் ளாறர்தம் நாமமே
மிளிரிள வளரெரி யிடிலிவை பழுதிலை மெய்ம்மையே “
தளி|ரிள வள|ரொளி தன|தெழில் தரு|திகழ் மலை|மகள்
குளி|ரிள வள|ரொளி வன|முலை இணை|யவை குல|வலின்
நளி|ரிள வள|ரொளி மரு|வுநள் ளா|றர்|தம் நா|மமே
மிளி|ரிள வள|ரெரி யிடி|லிவை பழு|திலை மெய்ம்|மை|யே
- வகுப்பு 39 நிறைவு —