வகுப்பு -38; யா-2
தமிழ் யாப்பிலக்கண வகுப்பு – 2. தொல்:பொருள்: உவமவியல்; 19-08-2026
1
அடுத்து ‘ உள்ளுறை உவமம் ‘. வெளிப்படையாக உவமங்களைக் கூறியமைந்த ஒரு செய்யுளுள்ளே அதற்கான பொருள் உறைந்து -மறைந்து- கிடப்பின் அது ‘உள்ளுறை உவமம் ‘ எனப்படும்.இது பெரும்பான்மையாக அகத்திணைப் பாடல்களிலேயே பயன்படுத்தப்படும். ஆதலால் தொல்காப்பியர் அகத்திணை இயலிலேயே இதற்கு விளக்கம் தருகிறார். அரிமா நோக்காக, அகத்திணை இயலை நோக்க, அங்கு நூற்பா 51 ல் இதைக் குறிக்கிறார்.
“உள்ளுறுத்து இதனோடு
ஒத்துப்பொருள் முடிகென
உள்ளுறுத்தும் உரைப்பதே உள்ளுறை உவமம்” (51)
இ-ள்:
உள்ளடக்கிக் கூறப்பட்ட கருப்பொருளை ‘கருதிய பொருள் இதனுடன் ஒன்றுபட்டு முடிக’ என்று உள்ளடக்கிக் கூறுவதே
‘ உள்ளுறை உவமமாம்’ எ-று
இது வினை, பயன், மெய், உரு இவற்றாலன்றிப் பொருள் உவமையாற் கொள்ளப்படுவதாம்.
எ-டு: (தண்டியலங்கார உதாரண வெண்பா)
“வெறிகொள் இனச்சுரும்பு மேய்ந்ததோர் காவிக்
குறைபடுதேன் வேட்டும் குறுகும் — நிறைமதுசேர்ந்து
உண்டாடுந் தன்முகத்தே
செவ்வி உடையதோர்
வண்டாமரை பிரிந்த வண்டு “
இங்கு உவமை உருபுகள் வரவில்லை. உவமைகள் மாத்திரமே காட்டப்பட்டன.
ஆயின் பொருள் உள்ளுறையாகவே உள்ளது. இது ‘ உள்ளுறை உவமம்’ ஆகும். இதில் ” ஆடவர் வண்டு போன்றவர்கள் ” என்பதே உள்ளுறை உவமப் பொருளாகும்.
— உவமவியல் நிறைவு —
( பொருளதிகாரம், இயல் – 8, ‘ செய்யுளியல் ‘ஆரம்பம்
இது செய்யுளின் இலக்கணம் கூறுவதால் ‘ செய்யுளியல்’ ஆயிற்று.
இ-ள்:
குறிலும் நெடிலும் தனித்து வந்தும், குறிலிரண்டு இணைந்து வந்தும், குறிலின் பின்னர் நெடில் இணைந்து வந்தும், அவை ஒற்றடுத்தும் வரும் முறையினாலே ‘ நேர் நிரை ‘ ஆகலினால், நேரசையும் நிரையசையும் என்றாம் எ-று
கண்டராதித்தர் திருவிசைப்பா:
” சீரான் மல்கு தில்லைச் செம்பொ னம்பலத் தாழி
தன்னைக் காரார் சோலைக் கோழி வேந்தன் ” என்ற அடியிலே ‘ கோழி வேந்தன் ‘ என்றதை உதாரண வாய்பாடாகக் கொள்வர்.
கோ = நெடில், ழி = குறில். இவை தனித்து வந்த நேரசைகள்.
வேந் = வே ( நெடில்) ஒற்றடுத்து வந்த நேரசை
தன் = த ( குறில்) ஒற்றடுத்து வந்த நேரசை
இவை நிரையசைகள் :-
நெறி = இது இணைக் குறில் – நிரையசை
சுறா = இது குறிலும் நெடிலும் இணைந்து வந்த நிரையசை
நிறம் = இது ஒற்றடுத்து வந்த நிரையசை
3
மேலும் இருவகை அசைகளைத் தொல்காப்பியர் விளக்குகிறார்.
“இருவகை உகரமோ டியைந்தவை வரினே
நேர்பு நிரைபு மாகு மென்ப” ( 319)
இ-ள்:
குற்றுகரம், முற்றுகரம் ஆகிய இருவகை உகரங்களும் வருநிலைக் கண், அவை நேர்பு நிரைபு எனப் பெயர் பெறும். ( நேர்பசை, நிரைபசை)
எ-டு:
காது, காற்று, கன்று, காவு, சார்பு, கல்லு — இவை முற்றுகர நேர்பசைகள்.
வரகு, அரக்கு, பனாட்டு, கதவு, புணர்வு, வினாவு — இவை குற்றுகர நிரைபசைகள்.
( ஒரு நுட்பம் — நேர், நிரை, நேர்பு, நிரை என்பன தமக்குத் தாமே உதாரணங்களாம்)
4
” இயலசை முதலிரண்டு ஏனைய வுரியசை “
இ-ள்:
முதலில் கூறப்பெற்ற நேரசைக்கும், நிரையசைக்கும் ‘ இயலசை’ என்றும், பின்னுரைத்த நேர்பசை க்கும், நிரைபசைக்கும்
‘ உரியசை ‘ எனவும் பெயராம் எ-று
- யாப்பிலாக்கண வகுப்பு 2 நிறைவு –